அதிமுக சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு...எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தா

சனி, 9 ஜனவரி 2021 (23:00 IST)
கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோடங்கிபட்டி பகுதியில் வழங்கிய தொடங்கி வைத்தார்.      

கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பில் ஒரு கிலோ பச்சரிசி,  வெல்லம், ஏலக்காய்,முந்திரி,நெய், பாசிப்பருப்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பை போக்குவரத்துறை அமைச்சர் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார். முதல் கட்டமாக கோடங்கிபட்டி முத்தாலம்மன் பகவதி அம்மன் ஆலயங்களில் சாமி தரிசனம் செய்து பின்னர் அனைத்து வீடுகளுக்கும் வீடுவீடாகச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை நேரில் வழங்கினார்.                         
 
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த தீபாவளி பண்டிகையை கரூர் தொகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தீபாவளி இனிப்பு காரம் கொண்ட பரிசுத்தொகுப்பு வழங்கினோம்.  தற்போது பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கி வருகிறோம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்