தாக்கப்பட்ட உதவி ஆய்வாளருக்கு 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (12:20 IST)
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் அருகே கோவில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து ஏற்பட்டது. 
 
படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரேட் திரேஷா நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 
 
இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பணியின் போது தாக்கப்பட்ட உதவி ஆய்வாளருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்