தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (13:20 IST)
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டடுள்ளது. 
 
மேலும் மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்