சென்னை செண்ட்ரல், கடற்கரை உட்பட 19 மின்சார ரயில்கள் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Prasanth Karthick

வியாழன், 3 ஏப்ரல் 2025 (08:31 IST)

சென்னையில் பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே மேற்கொள்ளப்படும் பராமரிப்பு காரணமாக இன்று மற்றும் ஏப்ரல் 5 (சனிக்கிழமை) அன்று சென்னை செண்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

 

அதன்படி, முழுவதுமாக ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்:

 

சென்னை செண்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 10.30, 11.35, 1.40 மணி ரயில்கள் ரத்து

 

கும்மிடிபூண்டியில் இருந்து சென்னை செண்ட்ரல் வரும் 1.00, 2.30, 3.15 மற்றும் 3.45 மணி ரயில்கள் ரத்து

 

சென்னை செண்ட்ரலில் இருந்து சூலூர் பேட்டை செல்லும் காலை 5.40, 10.15, 12.10 மணி ரயில்கள் ரத்து. 

 

சூலூர்பேட்டையில் இருந்து சென்னை செண்ட்ரல் வரும் மதிய 12.35, 1.15 மற்றும் 3.10 மணி ரயில்கள் ரத்து

 

ஆவடியிலிருந்து சென்னை செண்ட்ரல் செல்லும் காலை 4.25 மணி ரயில் ரத்து

 

பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

 

செங்கல்பட்டு - கும்மிடிபூண்டி இடையே காலை 9.55க்கு புறப்படும் மின்சார ரயில் கடற்கரை நிறுத்தத்துடன் பகுதியாக ரத்து

 

கும்மிடிப்பூண்டி - தாம்பரம் மாலை 3 மணி ரயில் கும்மிடிபூண்டி - கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டு கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும்

 

சிறப்பு ரயில்கள் இயக்கம்:

 

இந்த பகுதி நேர ரத்து காரணமாக சென்னை செண்ட்ரலில் இருந்து வேறு சில பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

 

சென்னை செண்ட்ரல் - பொன்னேரி - காலை 10.30

பொன்னேரி - செண்ட்ரல் - மதியம் 01.18

எண்ணூர் - செண்ட்ரல் - மாலை 3.56

செண்ட்ரல் - மீஞ்சூர் - காலை 11.35 மற்றும் 1.40

மீஞ்சூர் - செண்ட்ரல் - மாலை 4.14

சென்னை கடற்கரை - பொன்னேரி - மதியம் 2.40

பொன்னேரி - கடற்கரை - மாலை 4.47

கடற்கரை - எண்ணூர் - மதியம் 12.40

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்