கொளுத்தும் வெயிலில் குளிர்விக்க வரும் மழை! இன்று 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

Prasanth Karthick

வியாழன், 3 ஏப்ரல் 2025 (08:12 IST)

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி வெயில் வாட்டி வரும் நிலையில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து குளிர்ச்சியை அளித்துள்ளது.

 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று காலை 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்