தமிழக அரசு வழங்கும் 14 வகையான மளிகைப் பொருட்கள்

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (15:38 IST)
தமிழக அரசு ரேசனில் வழங்குவதாக அறிவித்தபடி இன்று முதல் 14 வகையான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில்  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டாவது நாளாக  தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. 

தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றது.

சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலங்கள் அரசுடன் இணைந்து மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது முழு ஊடங்கு உள்ளதால் கொரொனா தாக்கம் குறைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே 2000 ரூபாய் வழங்கியுள்ள நிலையில் மேலும் ரூபாய் 2000 ரூபாய் வழங்க சமீபத்தில் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் (ஜூன் 3ஆம் தேதி) முதல் இந்த பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது  இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த செய்திகள் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. 

 இந்த நிலையில் 13 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் 14 வகையான பொருட்கள் வழங்குவதற்கான வழங்குவதற்கான டோக்கன் நேற்று முதல் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் டோக்கன் வாங்க ரேஷன் கடைகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கி வருகிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

ஜூன் 4ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் ஜூன் 5-ஆம் தேதி முதல் ரேஷனில் 14 வகை பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நிர்வாக காரணங்களுக்காக துவரம் பருப்பு மட்டும் வரும் 7ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

14வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை  அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் கடைகள் மூல ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தநிலையில், நேற்று முதல் சென்னையில் டோக்க விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 14 வகையான பொருட்கள் பின்வறுமாறு:

கோதுமை மவு -1 கிலோ
உப்பு 1 கிலோ
ரவை – 1 கிலோ
உளுத்தம் பருப்பு –  ½ கிலோ
சர்க்கரை  ½ கிலோ
புளி ¼ கிலோ
கடலை பருப்பு ¼ கிலோ
கடுகு 100 கிராம்
சீரகம் 100கிராம்
மஞ்சள் தூள் 100 கிராம்
மிளகாய் தூள் 1கிராம்
டீ தூள் இரண்டு பாக்கெட் 100கிராம்
குளியல் சோப் 1( 125 கிராம்)
துணி சோப்பு ( 1 (250 கிராம்)

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே 2000 ரூபாய் வழங்கியுள்ள நிலையில் மேலும் ரூபாய் 2000 ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஜூன் மூன்றாம் தேதி முதல் இந்த பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்