11 ஆம் வகுப்பு சேர்க்கை - மாணவ மாணவிகள் ஆர்வமுடன் வருகை!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (09:41 IST)
மதுரையில் 11 ஆம் வகுப்புக்கு சேர்க்கை துவங்கியதும் மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். 

 
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கு ஊராடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து அந்த மாவட்டங்களில் இன்றுமுதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனைதொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
 
இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோருடன் வந்து சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்றும், விண்ணப்பித்தும் வருகின்றனர். அந்த வகையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பிற்கான சேர்க்கைக்கு  மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்