நுரையீரலை சுத்தம் செய்யும் பானம்... தயாரிக்கும் முறை
செவ்வாய், 15 ஜூன் 2021 (00:09 IST)
நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. மனித உடலுறுப்புகளில் முக்கியமான ஒன்று நுரையீரல்.
புகைப்பிடிப்பதால் ஆக்ஸிஜனோடு சேர்த்து நச்சுப் பொருட்களான நிக்கோடின், தார் மற்றும் காட்மியம் போன்றவையும் உள்ளே சென்று நுரையீரலின் உள்ளே தங்கிவிடும். இவையெல்லாம் அதிகமாக சேரும் போது நுரையீரல் கருப்பாக மாறுகிறது.
அப்படிப்பட்ட நச்சுப் பொருட்களில் இருந்து உங்களது நுரையீரலிலை காப்பாற்றி, நுரையீரல் புற்றுநோயில் இருந்தும் காப்பாற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த பானத்தை தயாரித்து குடித்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஒரு பெரியத் துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கியது
* 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
* 4 வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியது
* 250 கிராம் சர்க்கரை
* ஒரு லிட்டர் தண்ணீர்
இஞ்சியில் நோய் தொற்றுகளை நீக்கும் பண்பும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிக அளவில் உள்ளது. நோய் தொற்றுகளை நீக்கும் பண்பு உள்ளது. இது பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கக்கூடியது. வெங்காயத்தில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் அதிகம் இருக்கிறது. இவை நுரையீரலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றிவிடும்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். அதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். அடுத்ததாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து சற்று நேரம் கொதிக்க விடுங்கள். பின்னர் மஞ்சள் தூளை சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைத்திருங்கள். ஊற்றிய நீரின் அளவு பாதியாக குறைந்ததும் அடுப்பை நிறுத்தி விடுங்கள். இறுதியாக கொதிக்க வைத்ததை எடுத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.