பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

Siva

வெள்ளி, 10 ஜனவரி 2025 (07:44 IST)
பொங்கல் விடுமுறை தொடங்க இருப்பதை அடுத்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த வருடம் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொடர் விடுமுறைக்காக சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

ஏற்கனவே பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், தற்போது சிறப்பு பேருந்துகளில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு 14,012 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், பயணிகள் இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்ல சிறப்பு மாநகர இணைப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்