’’விஜய்66’’ படத்தில் விஜய்யின் அதிரடி முடிவு….ரசிகர்கள் ஏமாற்றம்!

திங்கள், 14 ஜூன் 2021 (22:57 IST)
இயக்குநர் வம்ஷி படத்தில் விஜய் நடிக்கவேண்டாம் என முடிவு எடுதுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது தெரிந்ததே

விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்த ஹேஷ்டேக் சமீபத்தில் டுவிட்டரில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து தெலுங்கு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய்யிடம் நான் கூறிய கதை அவருக்கு பிடித்து விட்டதாகவும் தில் ராஜ் தயாரிப்பில் இந்த படத்தை நான் தான் இயக்க இருக்கிறேன் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்ததும் தயாரிப்பாளர் வெளியிடுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், விஜய் தனது ஒவ்வொரு படத்தையும் சஸ்பென்சாக வைத்து அதுகுறித்த அறிவிப்பை அதிகாரப் பூர்வமாக வெளியிடுவார். ஆனால் சமீபத்தில் தெலுங்கு பட இயக்குநர் வம்ஷி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரடியாக செய்தியாளர்களிடம் கூறியதால் இப்படத்தில் நடிக்கவேண்டாம் என  விஜய் முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

மேலும், விஜய் இப்படத்தில் நடித்தால் அவர்தான் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெரும் நடிகர் என்ற சாதனை படைப்பார் என அவரது ரசிகர்கள் கூறி வந்த நிலையில் விஜய்யின் இந்த முடிவு அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்