இன்று வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் நடந்த சொர்க்கவாசல் நிகழ்வில் யார் பிரபந்தம் முதலில் பாடுவது என்பது குறித்த சண்டை வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் போட்டுக் கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பலமுறை காஞ்சிபுரம் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் மோதி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று சொர்க்கவாசல் திறப்பில் தினத்தில் கூட மோதிக்கொண்டது பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.