பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் காரணம் என்ன? காங்., தலைவர் கேள்வி

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (15:11 IST)
பிரதமர் மோடியின்  நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்தது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு  நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பாஜக சார்பில் பிரதமராகப் பதவியேற்றார்.

இதையடுத்து, 17வது பாராளுமன்றத் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு  நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணி 303 இடங்களில் வெற்றி பெற்று  இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, மோடி  2 வது முறையாக பதவியேற்றார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு கடந்த 2.5 ஆண்டுகளில் மட்டு 13 மடங்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

ALSO READ: அதானிக்கு பின்னாடி யார் இருக்கான்னு தெரியுமா? – ராகுல்காந்தி!
 
 
இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர்,  2014 ஆம் ஆண்டு 50,000 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளததற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்