வங்கதேச நாட்டில் ரயில் - பேருந்து மோதி விபத்து....11 பேர் பலி..பலர் படுகாயம்

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (15:43 IST)
வங்காள தேசம் நாட்டில் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ரெயில்வே  கேட்டை மினி பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்காள தேச நாட்டிலுள்ள சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ரெயில்வே கேட்டை இன்று ஒரு மினி பஸ் கடக்க முயன்றது. அப்போது, மிக வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மினி பஸ் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில்,  7 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் உயிரிழந்தனர்.5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்  குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்