தங்கம் மற்றும் வெள்ளியை பிரசாதமாக வழங்கும் கோயில் – எங்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:14 IST)
மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் தீபாவளி தினத்தன்று திருமணமான பெண்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் இருக்கும் ரத்லா நகரத்தில் அமைந்துள்ளது மகா லட்சுமி கோயில். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்டது நடந்துவிட்டால் தங்கம் மற்றும் வெள்ளியை காணிக்கையாக அளிக்கின்றனர். இதுபோல பக்தர்கள் கொடுக்கும் தங்கம் அதிகமாக வருவதால் ஆண்டுதோறும் தீபாவளி அன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அந்த தங்கம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த பிரசாதம் கோயிலுக்கு வரும் திருமணமான பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை வாங்கும் யாரும் அதை விற்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்