மத்திய பிரதேசத்தில் ஊள்ள தாமோ என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது சுக்ரானி அஹிர்வார் என்ற பெண் தன் 45 ஆவது வயதில் 16 ஆவது முறையாகக் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தையும் தாயும் உடல்நிலை மோசமாகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.