தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பல மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காற்று மாசு உள்ள மேலும் பல மாநிலங்களில் தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பேசி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க மத்திய பிரதேசத்தில் இந்துத்துவா அமைப்பினர் சிலர் பட்டாசு விற்கும் கடைகளை மிரட்டி வருவதாக வெளியாகியுள்ள செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பட்டாசுகளில் இந்து கடவுள்கள் படங்கள் இருப்பதும், பட்டாசுகளுக்கு இந்து கடவுள்கள் பெயர் வைத்து வெடிப்பதும் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறிவரும் அவர்கள் பட்டாசு கடைகளுக்கு சென்று கடை உரிமையாளர்களை மிரட்டி வருவதால் பரபரப்பௌ எழுந்துள்ளது.