மத்திய பிரதேசம் நிவாடி மாவட்டத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது புராபுஜுர்க் என்ற கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த குஷ்வாஹாவின் மகன் பிரஹ்லாத் என்ற 3 வயது சிறுவன் புதிதாக தோண்டப்பட்டு இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளார்.கிணற்றில் 100 அடியில் தண்ணீர் உள்ளதால் சிறுவன் எத்தனை அடி ஆழத்தில் சிக்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அவனை மீட்கும் பணிகள் இன்று அதிகாலையில் இருந்து நடந்து வருகின்றன.