தடுப்பூசி போடலைன்னா வெளியே போக தடையா? – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Webdunia
திங்கள், 2 மே 2022 (11:15 IST)
இந்தியாவில் தடுப்பூசி போடாவிட்டால் பொது இடங்களில் அனுமதி மறுப்பு என்ற உத்தரவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல மாநில அரசுகள் சில தடை விதித்துள்ளன.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்தவொரு தனி நபரையும் தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த முடியாது என்றும், எனவே மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்