தோனிக்குக் கிடைத்த ஆதரவு மற்றவர்களுக்கு கிடைத்ததா? யுவ்ராஜ் சிங் கேள்வி!

திங்கள், 2 மே 2022 (10:14 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் எழுப்பியுள்ள கேள்வி இணையத்தில் பரவி வருகிறது.

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை நாயகன் யுவ்ராஜ் சிங், அதற்கடுத்து 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு போட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் “தோனியின் சர்வதேசக் கிரிக்கெட் இறுதிகாலத்தைப் பாருங்கள். கோலியும், ரவி சாஸ்திரியும் அவருக்கு எவ்வளவு ஆதரவாக இருந்தார்கள் என்று தெரியும். அவர்கள்தான் அவரை உலகக்கோப்பைக்கு அழைத்துச் சென்று இறுதிவரை விளையாட வைத்தார்கள். ஆனால் இதே ஆதரவு, ஹர்பஜன், சேவாக் மற்றும் கம்பீர் போன்ற ஜாம்பவான்களுக்கு கிடைத்ததா என்றால் இல்லை. உங்களுக்கு நெருக்கடி அதிகமாகும் போது எப்படி நீங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவோ அல்லது பவுலிங்க் செய்யவோ முடியும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்