ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் தமிழகம் வருகை

Webdunia
திங்கள், 2 மே 2022 (11:05 IST)
இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் வந்து இறங்கி உள்ளனர்.

இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் போலீசார் மண்டபம் மெரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதியில் இருந்து இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்