700 கி மீ தாண்டி வந்த மாணவன்… 10 நிமிட தாமதத்தால் அனுமதி மறுப்பு - #நீட்கொடுமைகள்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (11:31 IST)
பல்வேறு விதமான எதிர்ப்புகளையும் மீறி நேற்று நீட் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.

நாடு முழுவதும் நேற்று மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் மாணவர்களை நீண்ட நேரம் காக்க வைத்து மதிய உணவு கூட உண்ணவிடாமல் தேர்வுக்கு அனுப்பியதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுகுறித்து பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் 5 நிமிடம் 10 நிமிடம் தாமதமாக வந்தவர்கள் கூட தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இதுபோன்றதொரு சம்பவம் பிஹார் மாநிலத்தில் நடந்துள்ளது. அங்கு யாதவ் என்ற மாணவன் நீட் தேர்வுக்காக சுமார் 700 கிமீ ஒருநாள் முழுவதும் பயணம் செய்து கொல்கத்தாவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு வந்துள்ளார். ஆனால் வெறும் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவருக்கு தேர்வெழுத அனுமதி வழங்கப்படவில்லை.

அதிலும் தேர்வு நேரம் 2 மணியென்றால் அவர் 1.40 மணிக்கே வந்துவிட்டார். ஆனால் மையத்துக்குள் நுழைய இறுதி நேரம் 1.30 என்பதால் அவர் அனுமதிக்கப்படவில்லை. இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்