வீர சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் புத்தகம் எழுதியுள்ளதற்காக காங்கிரஸுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சேவா தள பிரிவு மத்திய பிரதேசத்தில் “வீர சாவர்க்கர், கித்னே வீர்?” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஆங்கிலேய அரசிடம் உதவித்தொகை பெற்றதாகவும், மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவிற்கும் சாவர்க்கருக்கும் உடல்ரீதியான உறவு இருந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் சாவர்க்கர் குறித்த தவறான பிம்பங்களை மக்களிடையே ஏற்படுத்துவதாக மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கட்சி, கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த புத்தகத்தை மராத்தியில் வெளியிட கூடாது என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து மேடையில் பேசிய விவகாரத்தில் சிவசேனா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.