ரூ. 1கோடி மதிப்புள்ள ரூபாய்த் தாள்களால் அலங்கரிக்கப்பட அம்மன்..... சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (17:19 IST)
தசரா பண்டிகை தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் விதத்தில் கொண்டாடப்படுகிறது.வடமாநிலங்களில் தசரா பண்டிகையை முன்னிட்டு நேற்று பல்வேறு இடங்களில் ராவணனின் பொம்மை தீயிட்டுக் கொளுத்தினர்.

நேற்று  இரவு லூதியானாவில்  உள்ள பகுதியில் மக்கள்  30 அடி உயரமுள்ள ராவணன் உருவ பொம்மையை எரித்துக் கொண்டாடினர்.

அதேபோல் லக்னோவில்  ராம் லீலா மைதானத்தில் கலந்துகொண்ட  அமைச்சர்கள்,போலீசார் முன்னிலையில் 71 அடி உயரமுள்ள ராவணன் பொம்மைக்குத் தீ வைத்து மக்கள் எரித்தனர்

இந்நிலை தசரா பண்டிகையை  ஒட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கட்வால் என்ற பகுதியில் உள்ள  கன்யகா பரமேஸ்வதி  கோயிலில் அம்மனுக்கு ஓரிகாமி பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.

அதேபோல் தெலுங்கானாவில் சுமார் 1 கோடிரூபாய் மதிப்புள்ள பணத் தாள்களைக் கொண்டு அம்மனை அலங்கரித்துள்ள வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் மீண்டும் திருப்பித்தரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளாது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்