ஒரு புதிய தேவி அவதாரத்தில் லேடி சூப்பர்ஸ்டார்…. நயன்தாராவை புகழ்ந்த மாஸ்டர் பட நடிகர்

திங்கள், 26 அக்டோபர் 2020 (16:56 IST)
நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர் நேற்றுவெளியாகி இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் இப்படத்தி டிரைலரை பாராட்டி நயன்தாராவை  ஒரு புதிய அவதாரத்தில் லேடி சூப்பர் ஸ்டர் எனப் புகழ்ந்துள்ளார் நடிகர் சாந்தனு.
 

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில்  மூக்குத்தி அம்மனாக நயன்தாராவும் நடுத்தர குடும்பத்தில் உள்ள ஒரு வாலிபனாக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளனர்

ஆர்ஜே பாலாஜி குடும்பத்தின் குல தெய்வமான மூக்குத்தி அம்மன் அவர்கள் முன் நேரடியாக தோன்றி அதன் பின் ஏற்படும் கலகலப்பான மற்றும் அழுத்தமான காட்சிகள் தான் இந்த படத்தின் கதைக்களமாக உள்ளது.

மேலும் போலி சாமியார்களை தோலுரிக்கும் வகையான காட்சிகளும் பக்தி என்றால் என்ன என்பதை மக்கள் தவறாக எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் வெளீப்படுத்தும் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மூக்கு அம்மன் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ஷாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் குறித்து தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், .

@RJ_Balaji‘s take on a sensitive issue, delivering it as a fun entertainer.Ok hand இந்த பண்டிகை தினத்தில் நம்  வீடுகளுக்குள் ஒரு புதிய தேவி அவதாரத்தில் லேடி சூப்பர்ஸ்டார்

Smiling face with heart-shaped eyesThumbs up #MookuthiAmmanTrailer is lit.Collision symbolClapping hands sign @DisneyplusHSVIP பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 

.@RJ_Balaji‘s take on a sensitive issue, delivering it as a fun entertainer.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்