புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (17:58 IST)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர்  மருத்துவமனையில்,  அனைத்து நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த  மக்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

இந்த  நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு, 08.03.23  அன்று மத்திய அரசு விடுமுறை என்று அறிவித்துள்ளது,

மேலும், ‘இந்தத் தேதியில், நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வருவதைத் தவிர்க்கும்படி, கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனினும் அவசரப்பிரிவுகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் .வியாழன்(09-03-23) அன்று முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் இயங்கும்’ என  அறிக்கையில், தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்