ஊசியில் ஒட்டகம் நுழையாது - வைரமுத்து!

திங்கள், 9 மே 2022 (10:44 IST)
ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

 
ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஜிப்மர் அலுவலகங்களில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என மருத்துவமனை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் இன்று 300க்கும் மேற்பட்ட திமுகவினர் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கட்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி இந்த ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இதனிடையே இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவரின் பதிவு பின்வருமாறு, கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. வருந்துகிறோம். இந்தி படிப்போரை வெறுக்கமாட்டோம். திணிப்போரை ரசிக்கமாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
ஒருமைப்பாடு சிறுமைப்படாதிருக்க நாட்டின் பன்மைக்கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். சிலர் நுழைக்கப்பார்ப்பது ஊசியில் நூலன்று, ஒட்டகம். அது நுழையாது என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்