திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஆறு பக்தர்கள் பலியான நிலையில், அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அதனை அடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண நிதி என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டோக்கன் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களின் மத்தியில் திடீரென நெரிசல் ஏற்பட்டதை அடுத்து ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆந்திர மாநில அரசு பலியானவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த நெரிசலில் சிக்கிய சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் பலியாகி உள்ள நிலையில், அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரண நிதி என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், மல்லிகா உயிரிழந்த செய்தி அறிந்து ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவருடைய உடலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.