அண்ணாமலை ஒரு தலைவர், மேனேஜர் அல்ல.. ஆவேச பேட்டி அளித்த அண்ணாமலை..!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (17:55 IST)
அண்ணாமலை என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் என்றும் அவர் ஒரு நிறுவனத்தின் மேனேஜர் அல்ல என்றும் கட்சியின் வளர்ச்சிக்காக சில அதிரடி முடிவுகள் எடுக்கத்தான் செய்வோம் என்றும் அதற்கு கோபித்துக் கொண்டு கட்சியை விட்டு செல்பவர்கள் குறித்து தனக்கு கவலையில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
நான் ஒன்றும் இட்லி, தோசை சுட்டு சாப்பிடுவதற்காக தமிழகம் வரவில்லை என்றும் தமிழகத்தில் பாஜக என்ற கட்சியை வளர்க்க வந்துள்ளேன் என்றும் நான் ஒரு கட்சியின் தலைவன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஜெயலலிதா கருணாநிதி ஆகியோர் எப்படி அதிரடி முடிவு எடுத்து கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்களை நீக்குனார்களோ அதுபோல்தான் என்னுடைய நடவடிக்கையும் இருக்கும் என்றும் கட்சியின் வளர்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்ல நான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் 2026 இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு இதைவிட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்