புதுச்சேரி ஜிப்மரில் பராசிட்டமால் கூட இல்லையா?

வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:58 IST)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் தமிழிசை பேட்டி.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், குறிப்பாக நீரழிவு, இதய நோய், சிறுநீரக பிரச்சனை, நரம்பு பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகளின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அவலநிலைக்கு பல அரசியல் தலைவர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளூநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு பேட்டியளித்தார்…

ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என புகார் வந்ததை அடுத்து ஆலோசனை நடத்தினோம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். இங்கு பராசிட்டமால் கூட இல்லாமல் இருப்பது தவறு தான். 
 
தற்போது புற நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மருந்து இல்லை என சீட்டு எழுதி கொடுக்க கூடாது என நிர்வாகத்தினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்போது மருத்துவமனையில் அவசர கால பயன்பாட்டிற்குள் என்று கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது. கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்