பிரதமர் கோரிக்கை எதிரொலி: இன்றுடன் முடிவடைகிறதா கும்பமேளா?

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (07:17 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரில் கடந்த சில நாட்களாக கும்பமேளா திருவிழா நடந்து வருவதை அடுத்து அங்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர் 
இதனை அடுத்து கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் கூறப்பட்டது. மூன்று நாட்களில் கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களில் 2 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி ’மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கும்பமேளா திருவிழாவை நிறைவுசெய்ய துறவியர்கள் அமைப்பு அறிவித்துள்ளனர்
 
இதனால் இன்று முதல் ஹரித்வாரில் இருந்து லட்சக் கணக்கானோர் வெளியேற்றத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உத்தரகாண்ட் அரசு தெரிவித்த போது துறவியர்கள் அமைப்பு சம்மதம் தெரிவித்தால் கும்பமேளா திருவிழாவை உடனடியாக நிறைவு செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளது. இதனால் இன்று அல்லது நாளைக்குள் இந்த திருவிழா நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்