பள்ளிவாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரிய மனு: நீதிமன்றம் அதிரடி

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (13:05 IST)
குஜராத்  நீதிமன்றத்தில் பள்ளி வாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட   நிலையில் மனுவை தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம்.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக உள்ளது. இங்கு, ஒவ்வொரு  பல மதங்கள், மொழிகள், சாதிகள் இருந்தாலும் மக்கள் இந்தியர் உணர்வுடன் வாழ்கின்றனர்.
 
இருப்பினும் சில  இடங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்து வருகிறது. இதற்கு மாறாக இந்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், குஜராத்  நீதிமன்றத்தில் பள்ளி வாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
 
இதற்கு குஜராத் நீதிமன்றம்''10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்று கூறினால், கோயில்களில் ஒலிபரப்படும் பாடல்கள், பஜனைகளை என்னவென்று சொல்லுவீர்கள்'' என்று கேள்வி எழுப்பி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்