சனாதன வெறுப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (13:02 IST)
சனாதன வெறுப்பு விவகாரம் குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசிய நிலையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தனிநபர் வழக்கு மீது உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம் ஆனால் அதே நேரத்தில் சனாதன வெறுப்பு பேச்சு விவகாரத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 சனாதன  குறித்து  வெறுப்பு பேச்சால் ஏற்படும் வன்முறையை தடுக்க அதிகாரி நியமனம் செய்யப்பட்டாரா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தொடர்பாக நான்கு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதனை அடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்