I.N.D.I.A-வின் குரலாக சகோதரர் ராகுல் காந்தியின் குரல் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒலிக்கட்டும்’’
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (18:39 IST)
சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்பி ஆக இருந்த ராகுல் காந்திக்கு, குற்றவியல் அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது குஜராத் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட் அதிரடியாக பல கேள்விகளையும் எழுப்பியது.
இந்த நிலையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆகி பாராளுமன்றத்திற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து, இதை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திமுக உள்ளிட்ட முக்கியதஎதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில் இதுபற்றி அமைச்சரும், திமுக இளைரணி செயலாளருமான உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில்,
அரசியல் பழிவாங்கல் நோக்கோடு தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.
இந்த மகத்தான தீர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றியாகும். I.N.D.I.A-வின் குரலாக சகோதரர் ராகுல் காந்தியின் குரல் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒலிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.