பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்க அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (20:49 IST)
மே 3 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிய இருந்த நிலையில் இப்போதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இரண்டாவது ஊரடங்கை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்தார். அந்த ஊரடங்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,000 ஐ தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையி ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மோடி மாநில முதல்வர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடியோ கான்பரன்ஸிங்  மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று மே 3 ஆம் தேதிக்குப் பின்னரும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள்  விதித்துள்ளது. அதில், பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.மேலும், பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில்  பேருந்து சேவை.... பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்கலாம் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு பயணியுடன் கார் செல்ல அனுமதிக்கலாம் எனவும், ஆனால் அந்த  மாவட்டங்களுக்கு இடையே முறையான அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்