தமிழகத்தில் மொத்தமாக 2,363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் கொரோனாவால் 94 பேர்களும் நேற்று 138 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் மட்டும் மொத்தம் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவிக நகர், ராயபுரத்தை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி தேனாம்பேட்டை என்பதும், சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் இங்கு கொரோனாவால் 105 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கோடம்பாக்கத்தில் 97 பேர்கள், தண்டையார்பேட்டையில் 77 பேர்கள், வளசரவாக்கத்தில் 40 பேர்கள் அம்பத்தூரில் 27 பேர்கள் அடையாறில் 20 பேர்கள் திருவொற்றியூரில் 16 பேர்கள் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.