முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.306.04 கோடி வந்துள்ளது - தமிழக அரசு

வெள்ளி, 1 மே 2020 (15:04 IST)
மே 3ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க நான் அமைத்த 17 பேர் கொண்ட வல்லுநர் குழு, வல்லுநர்கள் மற்றும் மற்ற அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தங்களது இடைக்கால அறிக்கையை என்னிடம் இன்று சமர்பித்தனர் என தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக மக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.306 கோடியே  42 லட்சம் ரூபாய் 42 லட்சம் வந்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிவாரண நிதி வழங்கியுள்ள பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சார் நிறுவனங்கள், அரசு நிறுவன ஊழியர்கள், உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுகும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்