தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்..! கர்நாடக முதல்வர் அதிரடி உத்தரவு..!!

Senthil Velan
வியாழன், 25 ஜனவரி 2024 (13:31 IST)
கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்துவதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
 
தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றன. முக்கிய வாக்குறுதியான அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ALSO READ: அரசியல் கட்சி தொடங்க நடிகர் விஜய் திட்டம்?. அரசியல் கட்சியாக உருவெடுக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.!!
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக முதல்வர், ஏப்ரல் 1, 2006-க்கு முன்பாக அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் பிறகு பணி ஆணை வழங்கி வேலையில் அமர்த்தப்பட்ட 13,000 பேருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்