15 மாநிலங்களில் தடுப்பூசி திட்டம் நிறுத்தி வைப்பா? பரபரப்பு தகவல்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (21:57 IST)
மே 1ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர்களுக்கான முன்பதிவு தொடங்கியது என்பதும் தெரிந்ததே. கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களில் பதினெட்டு வயதுக்கு மேலானவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்காக கோடிக்கணக்கில் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது முன்பதிவு செய்தவர்களுக்கு நாளை முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படாது என தெரிகிறது. நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் 15 மாநிலங்களில் போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்பதால் அந்த திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த 15 மாநிலங்களில் தமிழகம் ஆந்திரா ஆகிய மாநிலங்களும் உண்டு என்பது குறிப்பிடதக்கது 
 
ஆர்டர் செய்த தடுப்பூசிகள் இன்னும் டெலிவரி செய்யப்படாததால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் 45 வயதிற்கு மேலானவர்களுக்கு வழக்கம்போல் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்