ஊரடங்கு தேவையில்லை, கொரோனா குறைந்து வருகிறது: மகாராஷ்டிரா முதல்வர்

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (21:56 IST)
இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள மாநிலம் மகாராஷ்டிரம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாகவும் அதனால் ஊரடங்கு உத்தரவு தேவைப்படாது என்றும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மகாராஷ்டிராவில் மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதாகவும் அதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது என்றும் ஊரடங்கு கடுமையாக்க தேவை இருக்காது என்றும் கூறியுள்ளார் 
 
இன்று கூட மகாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிக அளவிலான கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை இருக்கும் நிலையில் முதல்வரின் இந்த பேட்டி அளித்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒவ்வொருநாளும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இன்று அம்மாநிலத்தில் 62,919 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்