ஷாப்பிங் மால், தியேட்டர்களை மூட உத்தரவிட்ட மற்றொரு மாநிலம்!

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (19:38 IST)
தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தலைவிரித்து ஆடி வருகிறது என்பதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசுகள் திணறி வருகின்றன என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், பெரிய கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் புதிய கட்டுப்பாடு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஷாப்பிங் மால்கள், அழகு நிலையங்கள், சினிமா திரையரங்குகள், ஹோட்டல்கள், பார்கள், விளையாட்டு சம்பந்தப்பட்ட அனைத்து மைதானங்கள் ஆகியவை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
 
மேலும் காய்கறி மார்க்கெட் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மேற்கு வங்க மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்