நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகள் அகற்றப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வியாழன், 6 ஜூன் 2024 (17:49 IST)
நாடாளுமன்றத்தில் உள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் அகற்றம் என குற்றச்சாட்டு கூறியுள்ள ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது கொடுமையான விஷயம்  என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இது மத்திய அரசின் அட்டூழியமான செயல் என்றும், தலைவர்களின் சிலைகளை அகற்றுவது அராஜகமான நடவடிக்கை என்றும், மறைந்த தலைவர்களை அவமானப்படுத்தும் செயல் எனவும் தனது சமூக வலைத்தளத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளதை அடுத்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இதற்கு விளக்கம் அளித்த நாடாளுமன்ற அதிகாரிகள் சிலைகள் முழுவதுமாக அகற்றப்படவில்லை என்றும் வேறு இடத்தில் வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்