விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நட்த்தி வருகின்றனர்.
மேலும், ''நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும், கருத்துச் சுதந்திரச் செயல்கள் முழுவதையும் பிரதமர் மோடியின் அரசு ஏற்க மறுக்கிறது. அம்பேத்கர் பற்றி பேசிக் கொண்டு சமூக நீதிக் கொள்கைகள் எதையுமே நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது பிரதமர் மோடியின் அரசு. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் பட்சத்தில் 100 சதவீதம் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.