நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

Prasanth Karthick

வெள்ளி, 17 மே 2024 (18:34 IST)
தைவான் நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் கைகலப்பில் இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



பொதுவாகவே சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள் பரபரப்பு நிறைந்தவை. ஏகப்பட்ட தீர்மானங்கள், எதிர் கோஷங்கள், வெளிநடப்பு என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவுமே பல நாடாளுமன்றங்களில் அப்படிதான் போல. ஆனால் தைவான் நாடாளுமன்றத்தில் ஒரு கட்டம் மேலே போய் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களே கைகலப்பில் ஈடுபட்டதால் நாடாளுமன்றமே போர்க்களமான காட்சி சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

தைவானில் எதிர்கட்சியான கே.எம்.டி கட்சி மற்றொரு எதிர்கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் டிபிபி கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. கே.எம்.டி கட்சியின் ஆட்சி அங்கு தொடங்கிய நிலையில் நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்குதல், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீது கிரிமினல் வழக்கு என்று எந்த விவாதமும் இல்லாமல் மளமளவென தீர்மானங்களை நிறைவேற்றத் தொடங்கியுள்ளனர்.

ALSO READ: தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

இதனால் கடுப்பான முன்னாள் ஆளும் கட்சி டிபிபியின் எம்பிக்கள் கைகலப்பில் இறங்க நாடாளுமன்றமே சண்டை கூடாரமாகி போயுள்ளது. ஒரு டிபிபி கட்சி எம்.பி தீர்மானங்கள் உள்ள ஃபைலை ஆளுங்கட்சி எம்பியிடம் இருந்து பறித்துக் கொண்டு நாடாளுமன்றத்தை விட்டு வெளியே ஓடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்