CAA -விண்ணப்பிக்க செயலி அறிமுகம்

Sinoj

வெள்ளி, 15 மார்ச் 2024 (22:17 IST)
பிரதமர் மோடி தலைமையிலான   பாஜக ஆட்சி நடந்து வருகிறது.   கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட மசோதா  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
 
இந்த சிஏஏ  மக்களவை தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தப்படும் என்று மத்திய  உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில்,  மத்திய அரசு   நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமலுக்கு வருவதாக கடந்த 11 ஆம் தேதி  அறிவித்தது. 
 
அதன்படி, வங்க தேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு ஆளாகி, அங்கிருந்து, கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், பார்சிகள், பவுத்தர்கள், சமணர் மற்றும் சீக்கியர் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்த  இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ வழிவகை செய்கிறது.
 
இதற்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம், புரட்சி பாரதம், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணபிக்க செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்திய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற விரும்பும் மக்கள் விண்ணப்பம், செய்வதற்காக இணையதளம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் சிஏஏ-2019 என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்