இந்த கொலை வழக்கில் தற்போது வரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, அருள், சந்தோஷ் ராமு உள்ளிட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் குற்றம் சாட்சி வருகின்றனர்
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளதாகவும், அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதி உள்ளார்.