திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பலர் மலைப்பாதை வழியாக படிகளில் நடந்து சென்று தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சில நாட்கள் முன்னதாக அவ்வாறு மலைப்பாதை வழியாக சிலர் சென்றுக் கொண்டிருந்தபோது 6 வயது சிறுமி லட்சிதாவை சிறுத்தை தாக்கிக் கொன்றது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தேடுதலை தீவிரப்படுத்தியது. மேலும் மலைப்பாதை வழியாக 15 வயதிற்கும் குறைவான சிறுவர்களை அழைத்து செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியுள்ளது. இந்த சிறுத்தை சிக்கி விட்டாலும் மலைப்பாதையில் மற்ற காட்டுயிர்களால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.