விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

Mahendran

திங்கள், 31 மார்ச் 2025 (16:01 IST)
தமிழகத்தில் மகளிர்  உதவித் தொகை பெறாமல் விடுபட்ட மகளிருக்கு, மூன்று மாதங்களுக்குள் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள வெற்றிலைமுருகன்பட்டி மற்றும் அல்லாளபேரி பகுதிகளில், மொத்தம் ரூ. 9.45 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட புதிய நியாயவிலைக் கடைகளை, இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதேபோல், எஸ்.மறைக்குளம் பகுதியில் ரூ. 13.16 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையைவும் திறந்து வைத்தார்.
 
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பலரும் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் மூன்று மாதங்களில் விடுபட்ட மகளிரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெறும். 
 
அந்தவகையில், தகுதிப் பெற்ற அனைத்து மகளிருக்கும் உதவித் தொகை வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்," எனக் கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்