தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

Prasanth Karthick

திங்கள், 31 மார்ச் 2025 (14:13 IST)

மகாராஷ்டிராவில் மராத்தி பேச மறுப்பவர்களை அறையுங்கள் என ராஜ் தாக்கரே பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பிற்கு எதிராக போராடுவதாக திமுக மற்றும் தோழமை கட்சிகள் அறிவித்த நிலையில், அதை தொடர்ந்து பல மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்த விவாதங்கள் கிளம்பியுள்ளது.

 

அப்படியாக மகாராஷ்டிராவிலும் அவர்கள் தாய் மொழியான மராத்தியை அனைவரும் பேச வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து சமீபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசும்போது “ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி இருக்கிறது. அது மதிக்கப்பட வேண்டும். மொழி பிரச்சினையில் இந்தி வேண்டாம் என்று தமிழ்நாட்டு மக்கள் தைரியமாக சொல்கிறார்கள். இங்கே மகாராஷ்டிராவில் பலர் சொந்த மொழியான மராத்தியை பேசுவதில்லை. மும்பையில் இருந்து கொண்டே மராத்தி பேச முடியாது என்கிறார்கள். இனி யாராவது மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்” என பேசியுள்ளார்.

 

முன்னதாக மகாராஷ்டிராவில் ஏர்டெல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் மராத்தியில் பேசியபோது, ஊழியர்கள் இந்திதான் தெரியும், இந்தியில் பேசுங்கள் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்