7 மாதங்களில் ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா... வெளியான தகவல்

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (18:00 IST)
7 மாதங்களில் ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மொத்தம் ரூ.827 கோடி என்று கூறப்படுகிறது.
 
இந்தியாவில் உள்ள பிரபலமான கோயில் ஏழுமலையான் கோயில். இக்கோயில்  ஆந்திர மாநிலம் திருப்பதி நகரத்தில் உள்ள திருமலையில்  அமைந்துள்ளது. இந்த மலை ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற  ஒன்றாகும்.

இக்கோயிலுக்கு  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இக்கோயிலுக்கு வரும் பக்தர் காணிக்கை அளித்து வரும்  நிலையில் கடந்த ஜனவரியில் ரூ.123 .7 கோடியும், பிப்ரவரியில் ரூ.114.29 கோடியும், மார்ச்சில் ரூ120.29 கோடியும், ஏப்ரலில் ரூ.114.12 கோடியும்.  மே மாதம் ரூ.109.99 கோடியும், ஜூனில் ரூ.116.14 கோடியும், ஜூலை மாதம் ரூ.129 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், 7 மாதங்களில் ஏழுமலையால் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மொத்தம் ரூ.827 கோடி என்று கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்