மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

Prasanth Karthick

திங்கள், 31 மார்ச் 2025 (15:58 IST)

கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா என்ற பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக அறிவித்த இயக்குனர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளார்.

 

சமீபத்தில் ப்ரயாக்ராஜில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில் பாசிமணி விற்ற மோனலிசா என்ற பெண் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனார். அதை தொடர்ந்து அவருக்கு ஏராளமான ஃபாலோவர்கள் அதிகரித்த நிலையில், சினிமா இயக்குனர் சனோஜ் மிஸ்ரா என்பவர் மோனலிசாவை சந்தித்து அவருக்கு பட வாய்ப்பு வழங்கினார்.

 

டைரீஸ் ஆப் மணிப்பூர் என்ற படத்தில் நடிப்பதற்காக மோனலிசாவிற்கு அவர் ரூ.21 லட்சம் சம்பளமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில்தான் இதே போல சினிமா ஆசைக்காட்டி வேறு ஒரு பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் சனோஜ் மிஸ்ரா கைதாகியுள்ளார். உத்தர பிரதேசம் ஜான்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை சினிமாவில் நடிக்கை வைப்பதாக ஆசைக்காட்டிய சனோஜ் மிஸ்ரா, அந்த பெண்ணை ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

அதை வீடியோவும் எடுத்துக் கொண்ட அவர் அதை காட்டி மிரட்டி அந்த பெண்ணை மும்பைக்கு அழைத்து சென்று தனியாக ஒரு வீட்டில் குடியேற்றி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் மூன்று முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளார்.

 

இதற்கிடையே மோனலிசா வீடியோ வைரலான நிலையில் மோனலிசாவை நடிக்க வைப்பதாக சந்தித்து பணம் கொடுத்துள்ளார். அதற்கு பிறகு அந்த இளம்பெண்ணை அவர் கைவிட்டதுடன், இதுகுறித்து காவல் நிலையம் சென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

 

இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் தற்போது சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மோனலிசா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்